216. அறையணிநாயகர் கோயில்
இறைவன் அதுல்யநாதேஸ்வரர், அறையணிநாயகர்
இறைவி அழகிய பொன்னம்மை, அருள்நாயகி
தீர்த்தம் பாண்டவ தீர்த்தம், பெண்ணையாறு
தல விருட்சம்  
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருஅரையணிநல்லூர், தமிழ்நாடு
வழிகாட்டி திருக்கோவிலூர் இரயில் நிலையத்துக்கு முந்தைய இரயில் நிலையம் அறையணிநல்லூர். தற்போது 'அரகண்டநல்லூர்' என்று அழைக்கப்படுகிறது. இரயில் நிலையத்தின் எதிர் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.
தலச்சிறப்பு

Aragandanallur Gopuramபெண்ணாயாற்றில் உள்ள சிறிய குன்றின்மீது இக்கோயில் அமைந்துள்ளது. பெரிய இராஜகோபுரம் நதியை நோக்கியவாறு உள்ளது. மூலவர் மேற்கு பார்த்த சன்னதி. வெளிப்புறம் உள்ள சன்னதியில் அம்பிகை (சுமார் 5அடி உயரம்) மிகவும் அழகாக காட்சி தருகின்றாள்.

Aragandanallur Sambandarஇந்த குன்றின் மீது இருந்துதான் ஞானசம்பந்தர் திருவண்ணாமலையை முதலில் தரிசனம் செய்தார் என்று கூறுவர். இக்கோயிலின் பிரகாரத்தில் கொடிமரத்தின் அருகில் சம்பந்தர் பாத வடிவம் உள்ளது. தற்போதும் இங்கிருந்து பார்த்தால் திருவண்ணாமலை தெரிகின்றது. உயரமான பல கட்டிடங்கள் வந்துவிட்டன. அதனால் சற்று உற்றுப் பார்க்க வேண்டும்.

Aragandanallur Ramanarஇரமண மகரிஷி திருவண்ணாமலை செல்லும் வழியில் இங்கு சிலகாலம் தங்கியிருந்தார். அவரது இளவயது திருவுருவச் சிலை உள்ளது. இராஜகோபுரத்திற்கு வெளியே கோயில் அருகில் பஞ்ச பாண்டவர் குகை உள்ளது. வனவாசத்தின்போது அவர்கள் இங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு பெரிய குளங்களும் உள்ளன.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். தொடர்புக்கு : 9965144849.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com